PSLV-C52 rocket successfully launched
பூமியை ஆய்வு செய்வதற்கான செயற்கைகோள் இ.ஓ.எஸ்., 04 இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு கழகம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) இன்று திங்கள் காலை 5:59 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் பவன் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி., சி 52 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்., 04 என்ற செயற்கை கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.
பி.எஸ்.எல்.வி., சி 52 ராக்கெட் (PSLV-C52 Rocket)
பூமியைப் பற்றி ஆய்வு செய்வதற்கு இ.எஸ்.ஓ., 04 செயற்கை கோள் ஏவப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் 1710 கிலோகிராம் எடை கொண்டது. பூமியிலிருந்து 579 கி.மீ உயரத்தில் நிறுவப்பட உள்ளது. இது பூமியின் தட்பவெப்பநிலை, விவசாயம், வனவளம் குறித்த தெளிவான புகைப்படங்களை எடுக்கக் கூடியது.
நடப்பு ஆண்டில் இஓஎஸ்-4 ரிசாட்-1ஏ மற்றும் இஓஎஸ்-6 ஓசோன் சாட்-3 ஆகிய 2 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ராக்கெட் மூலம் இஓஎஸ்-4 உட்பட 3 செயற்கைகோள்களை விண்ணுக்கு இன்று விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
1710 கிலோ எடை கொண்ட ரிசாட்-1ஏ என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், மாணவர் செயற்கைக்கோளான இன்ஸ்பைர்சாட்-1 மற்றும் தொழில்நுட்ப விளக்கக் செயற்கைக்கோளான ஐஎன்எஸ்-2டிடி ஆகிய 3 செயற்கைகோள்களும் பிஎஸ்எல்வி - சி52 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
வெள்ளி கிரகத்தின் மேற்ப்புறத்தை படம் பிடித்தது பார்க்கர் விண்கலம்!
சென்னையில் எரிபொருள் பேட்டரி தானியங்கி உற்பத்தி மையம்: மத்திய அமைச்சர் தகவல்!
Share your comments