பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க, புரெவி புயல் (Burevi Cyclone) காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை (Leave) என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு பொது விடுமுறை:
புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரெவி புயல் இன்று (3.12.2020) மன்னார் வளைகுடா (Gulf of Mannar) பகுதியில், பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இப்புயல், (04-12-2020) அன்று அதிகாலையில் பாம்பன்- கன்னியாகுமரிக்கு இடையே, தென்தமிழக கடற்கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (Indian meteorological center) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு புயல் கரையை கடக்கும் போது, பெரும் மழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதால், முன்னெச்சரிக்கை (Precautions) நடவடிக்கையாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (04-12-2020) அரசு பொது விடுமுறை (Government Public Holiday) அளிக்கப்படுகிறது. இதற்கு ஈடாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் (Government Office) செயல்படும்.
அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி:
மேற்கூறிய 6 மாவட்டங்களில், அத்தியாவசிய பணிகள் தவிர, பிற பணிகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, நிவர் புயல் (Nivar Cyclone) தாக்கிய போதும் தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதே போல், புரெவி புயலுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவித்துள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
குறைந்தது புரெவி புயலின் வேகம்! இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!
அரசின் அருமையான நடவடிக்கை! நிவர் புயலால் சாய்ந்த மரங்களிலிருந்து உரம் தயாரிப்பு!
Share your comments