பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து செய்தி வெளியாகி உள்ளது. பல வங்கிகள் மற்றும் நிறுவனங்களை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்து, அதற்கான பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எஸ்பிஐ தவிர (Except SBI)
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியைத் தவிர அனைத்து அரசு வங்கிகளையும் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முன்னணி பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது தவிர, நாட்டின் 6 அரசு வங்கிகள் தனியார் மயமாக்கப்படாது என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பட்டியலில், பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் வங்கி, கனரா வங்கி, எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் இந்தியன் வங்கி ஆகிய வங்கிகளை மத்திய அரசு தனியார் மயமாக்காது என்று கூறப்பட்டுள்ளது.
அரசு அதிகாரி ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, அரசு வங்கிகளின் தனியார் மயமாக்கலில் மேற்கூறிய வங்கிகள் இருக்காது என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 10 வங்கிகளில் 4 வங்கிகள் இணைக்கப்பட்டன. அதன் பிறகு நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27 இல் இருந்து 12 ஆகக் குறைந்தது. எனினும் தற்போது தனியார்மயமாக்கல் குறித்து எந்த திட்டமிடலும் அரசிடம் இல்லை.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிதியமைச்சகம், இந்த வங்கிகள் அனைத்தும் தனியார்மயமாக்கப்படாமல் இருக்கும் என்று கூறியுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஐடிபிஐ வங்கி தனியார் மயமாக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்திருந்தார். இந்த வங்கியின் பங்குகளை விற்க அரசு திட்டம் வகுத்துள்ளது. இது தொடர்பான செயல்முறையும் தொடங்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தரப்பில் தொடர் போராட்டம் இருந்தபோதிலும், தனியார்மயமாக்கல் தொடர்பான தனது நிலைப்பாட்டை அரசாங்கம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் படிக்க
சொந்தமாக தொழில் தொடங்குவோருக்கு ஆனந்த் மஹிந்திராவின் அறிவுரை!
ஃபிக்சட் டெபாசிட் வட்டி உயர்வு: கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!
Share your comments