தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு 2020- 21ம் காரீப் சந்தை பருவத்திற்கு 14.09 எல்எம்டி பருப்புகள் மற்றும் எண்ணை வித்துக்களைக் (Nuts and oilseeds) கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2020 – 21ம் ஆண்டுக்கான காரீப் சந்தைப் பருவம் தொடங்கியுள்ளது. இதையடுத்து முந்தைய பருவகாலங்களில் கொள்முதல் செய்தது போலவே தற்போது நிலவும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டங்களின் படி 2020 – 21 பயிர்களை உழவர்களிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில், அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.
மாநிலங்களிடம் இருந்து பெற்ற திட்ட முன்மொழிவுகளின்படி தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு 2020-21ம் காரீப் சந்தை பருவத்திற்கு 14.09 எல்எம்டி பருப்புகள் எண்ணை வித்துக்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும், காரீப் பருவ, பருப்புகள் எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றுக்கான முன்மொழிவுகள் வரப்பெற்ற பிறகு ஒப்புதல் அளிக்கப்படும்.
அறிவிக்கப்பட்ட அறுவடை காலத்தின்போது சந்தை விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக், குறைவாக இருக்கும் பட்சத்தில், விலை ஆதரவு திட்டத்தின் படி எஃப்ஏக்யூ தர கொள்முதல் மேற்கொள்ளப்படும்.
கடந்த செப்டம்பர் 28ம் தேதி வரையிலான காலத்தில், அரசு இணைப்பு முகமைகளின் மூலமாக, தமிழ்நாட்டில் உள்ள 48 விவசாயிகள் பயனடையும் வகையில் 33 லட்ச ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலை மதிப்பிலான 46.35 எம்டி பச்சைப்பயிறு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 3961 விவசாயிகள் பயனடையும் வகையில் 52.40 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலை மதிப்பிலான 5089 எம்டி கொப்பரை தேங்காய் (வருடம் முழுதும் விளைச்சல் தரும் பயிர்) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த அளவு 1.23 எல்எம்டி அளவை விட இது அதிகமாகும். 2020 – 21ம் பருவத்துக்கான பருத்தி கொள்முதல் நாளை முதல் தொடங்க உள்ளது. எஃப்ஏக்யூ தர பருத்தி கொள்முதலும், அக்.1, 2020 முதல் இந்திய பருத்திக் கழகம் (Cotton council of India(CCI) தொடங்குகிறது.
மேலும் படிக்க...
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரிசி கொள்முதல் - அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு !
காந்தி ஜெயந்தி அன்று 1.16 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்!
Share your comments