Credit: Daily thanthi
கம்பம் பகுதியில் போதிய விலையில்லாததால் விவசாயிகள் முள்ளங்கியை சாலையோரத்தில் கொட்டிச் செல்கின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதிகளில் தென்னை, வாழை மற்றும் திராட்சைக்கு அடுத்தபடியாக பீட்ரூட், முள்ளங்கி, புடலங்காய், வெண்டைக்காய், தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
அமோக விளைச்சல்
அதன்படி குறுகிய கால பயிரான முள்ளங்கி அதிகளவில் பயிரிடப்பட்டிருந்தது. தற்போது முள்ளங்கி நன்கு விளைச்சல் (Harvesting) அடைந்த நிலையில், அறுவடை பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதேநேரம், வரத்து அதிகரிப்பு காரணமாக உள்ளூர் சந்தையில் முள்ளங்கிக்கு போதிய விலையில்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒரு கிலோ முள்ளங்கி ரூ.5க்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் சாகுபடி செய்த செலவை கூட எடுக்க முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கவலை
எனவே விவசாயிகள் தோட்டங்களிலேயே முள்ளங்கியை அறுவடை செய்யாமல் விட்டுவிடுகின்றனர். இதன் காரணமாக முள்ளங்கி செடியிலேயே முதிர்ந்து விணாகி வருகிறது.
மேலும் சில இடங்களில் அறுவடை செய்யப்பட்ட முள்ளங்கியை வியாபாரிகள் வாங்க முன் வராததால், விரக்தியடைந்த விவசாயிகள் சாலையோரத்திலேயே முள்ளங்கியைக் கொட்டிச் செல்கின்றனர்.
மேலும் படிக்க...
Share your comments