Rainfall in Tamil Nadu - Meteorological Center
தமிழகத்தில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகின்ற காரணத்தால் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமான மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு சில இடங்களில் அதாவது தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்கள், வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் உள்மாவட்டங்கள் மேலும் புதுவை பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
19-ந் தேதி அன்று மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
அதனை தொடர்ந்து 20-ந் தேதி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் 21-ந் தேதி லேசான மழை பெய்யும்.
சேலம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் 22-ந் தேதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments