ராஜஸ்தான் சட்டசபையில் பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே குழந்தை திருமணத்தை (Child Marriage) அங்கீகரிக்கும் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
குழந்தை திருமணம்
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு சட்டசபை விவகாரத் துறை அமைச்சர் சாந்தி குமார் தரிவால் கட்டாய திருமணப் பதிவு சட்டத் திருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:இந்த மசோதா 21 வயதுக்கு உட்பட்ட ஆண், 18 வயதுக்கு உட்பட்ட பெண் ஆகியோரின் திருமணத்தை அங்கீகரிக்கிறது.
அதே சமயம் இந்த சட்டத் திருத்தம் குழந்தை திருமணத்தை அங்கீகரிக்கவில்லை. குழந்தை திருமணம் செல்லுபடியாகும் எனக் கூறவில்லை. திருமணத்தை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கிறது. இது, மத்திய அரசின் சட்டத்திற்கு எதிரானது அல்ல. திருமணப் பதிவை கட்டாயமாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
அதன் அடிப்படையில் தான் இந்த சட்டத் திருத்த மசோதாவில் குழந்தை திருமணம் சேர்க்கப்பட்டுள்ளது. அதே சமயம், திருமணம் நடந்த 30 நாட்களுக்கு உள்ளாக தம்பதியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். திருமணப் பதிவுக்காக விண்ணப்பிக்கும் பகுதியில் தம்பதியர் குறைந்தது 30 நாட்கள் வசித்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மசோதா குழந்தை திருமணத்தை ஆதரிப்பதாக கூறி, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இதையடுத்து குரல் ஓட்டெடுப்பு வாயிலாக மசோதா வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
மேலும் படிக்க
குரல் வழியாக பரிவர்த்தனை: ரிசர்வ் வங்கி அனுமதி!
BYJU'S நிறுவனத்தின் அசத்தல் திட்டம்: குழந்தைகளுக்கு இலவச கல்வி!
Share your comments