கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் (TNAU) கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர், பண்ணை மேலாளர், வாகன ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் நியமனம் நடைபெற உள்ளது.
வேளாண் துறையில் ஆர்வமுள்ளவரா நீங்கள்? தமிழக வேளாண்மைக்கு முதன்மையானதாகவும், விவசாயிகளுக்கு வழிகாட்டியாகவும் செயல்படும் உன்னத கல்வி நிறுவனமான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) பணியாற்ற விருப்பமா?அப்படியானால், இந்த வேலைக்கு நீங்களும் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த கல்வி நிறுவனத்தில், கம்ப்யூட்டர் அசிஸ்டண்ட் ப்ரோக்ராமர் மற்றும் ஓட்டுநர் பதவிகளுக்கு மொத்தம் 44 காலியிடங்களுக்கு ஆட்கள் நியமனம் நடைபெற உள்ளது.
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் ( Posting)
மொத்த காலியிடங்கள் - 44
-
ப்ரோக்ராமர் அசிஸ்ட்ண்ட்(Comp) - 2
-
ப்ரோக்ராமர் அசிஸ்ட்ண்ட்(Technica) - 4
-
பண்ணை மேலாளர் - 4
-
ஜூனியர் அசிஸ்டண்ட் கம் டைபிஸ்ட் - 14
-
ஓட்டுநர் - 20
கல்வித்தகுதி (Education Qualification)
அனைத்து பதவிகளுக்கும் வெவ்வேறு கல்வித்தகுதி உள்ளதால், அதனை இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
வயது (Age)
18 வயது முதல் 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சிறப்புப் பிரிவினருக்கு வயது விலக்கு உண்டு
விண்ணப்பிப்பது எப்படி? (How to Apply)
விருப்பமுள்ளவர்கள் kvk.tnausms.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம்.இணையதளத்திலேயே அனுப்ப நவம்பர் 9ம் தேதி கடைசிநாள். அல்லது தபாலில் அனுப்ப விரும்பினால் அதற்கான காலக்கெடு நவம்பர் 13ம் தேதி.
அனுப்ப வேண்டிய முகவரி
பதிவாளர்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் - 641 003
கட்டணம் (Fees)
SC/SC(A)/ST பிரிவினருக்கு ரூ.500 கட்டணம்
மற்றவர்களுக்கு ரூ.750 கட்டணம்
தேர்வு செய்யப்படும் முறை (Selection)
எழுத்துத் தேர்வு மூலமே தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்படுவர். தொடர்ந்து நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன் ஆட்கள் நியமனப் பணிகள் நிறைவடையும்.
ஆன்லைன் விண்ணப்பங்கள் குறித்த சந்தேகங்களுக்கு 0422 – 6611508
என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க
MGNREGAவில் 44 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமனம்- 4 நாட்களே எஞ்சியிருப்பதால் முந்துங்கள்!
FSSAI ஊழியராக விருப்பமா? நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
Share your comments