தமிழகத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே ரேஷன் (நியாயவிலைக் கடை) கடையில் பணியாற்றுவோரை இடமாற்றம் செய்ய கூட்டுறவுத் துறை அதிரடி உத்தவு பிறப்பித்துள்ளது.
34,000 கடைகள் (34,000 stores)
தமிழகத்தில் 34 ஆயிரத்துக்கும் அதிகமான நியாயவிலைக் கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கடைகள் கூட்டுறவுத் துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இதர நபர்கள் (Other persons)
இந்நிலையில் மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களை தவிர்த்து, இதர வெளிநபர்கள் கடைகளில் இருக்கின்றனர். இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தொல்லைகள் ஏற்படுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
தொல்லை (Torture)
குறிப்பாக நியாய விலைக்கடைகளில் பணியாளர்கள் ஒரே கடையில் தொடர்ந்து பணிபுரிவதால், அவர்கள் தொடர்புடைய வெளிநபர்கள் கடைகளில் இருந்து அங்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொல்லைகள் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது.
அதிரடி உத்தரவு (Order of Action)
இதனைத் தவிர்ப்பதற்காக பல்வேறு புதிய அறிவுறுத்தல்களை தமிழக கூட்டுறவுத்துறை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
3 ஆண்டுகள் மட்டுமே (3 years only)
மூன்று ஆண்டுகளுக்கு மேல்ஒரே நியாயவிலைக் கடையில் பணியாளர்கள் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது.
வெளிநபர்கள் கூடாது (Outsiders should not)
அவ்வாறு பணியாற்றுபவர்களை அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும். நியாயவிலைக் கடைகளில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் தவிர வெளிநபர்கள் யாரும் பணியாற்றக் கூடாது.
அவ்வாறு இருப்பது தெரியவந்தால், அவர்கள் மீது கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநபர்களை அனுமதித்து, அவர்களுக்கு துணைபோன பணியாளர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
இந்தியாவில் எலக்ட்ரிக் பஸ்ஸை இயக்க சென்னை உள்பட 9 நகரங்கள் தேர்வு!
கல்லூரிகளில் சேர ஜூலை 26 முதல் விண்ணப்பிக்கலாம்! மாணவர்களுக்கு அழைப்பு
Share your comments