1. செய்திகள்

RBI-இன் புதிய விதிகள் அமல்! சாமானியர்களுக்கு பாதிப்பா?

Deiva Bindhiya
Deiva Bindhiya
RBI: Locker Holders Attention! New rules implemented!

தங்கம் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களை, பாதுகாப்பாக வைக்க, பெரும்பாலான மக்கள் வங்கிகளின் லாக்கரை நம்புகிறார்கள். அந்நிலையில், லாக்கர்கள் தொடர்பான விதிகளை ரிசர்வ் வங்கி (RBI) மாற்றி அமைத்துள்ளது.  ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடதக்கது. 

வங்கி மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு முன்னேற்றங்கள், நுகர்வோர் புகார்களின் தன்மை மற்றும்  இந்திய வங்கிகள் சங்கத்தின் கருத்துக்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, வங்கி லாக்கர்கள் அதாவது (Bank Locker) தொடர்பான நேறிமுறைகளில் சமீபத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்களை அறிந்திடுங்கள்.

RBI வழிகாட்டுதல்: லாக்கரை உடைத்து, லாக்கரில் உள்ளவற்றை,  லாக்கர் உரிமையாளரின் நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு மாற்றவோ அல்லது வெளிப்படையான முறையில் பொருட்களை அப்புறப்படுத்தவோ வங்கிகளுக்கு அதிகாரம் உண்டு. இதையடுத்து லாக்கர் உரிமையாளர் 7 ஆண்டுகள் வாடகை ஏதும் செலுத்தாமலும், அதனை திறக்காமலும் இருப்பின், லாக்கரை உடைத்து, சட்டப்பூர்வ வாரிசுக்கு மாற்றவோ அல்லது வெளிப்படையான முறையில் பொருட்களை அப்புறப்படுத்தவோ வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

RBI-இன் வழிகாட்டுதல்: மேலும், லாக்கரை திறப்பது குறித்து, வங்கி லாக்கரை வைத்திருப்பவருக்கு, கடிதம் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்றும், பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி மற்றும் எஸ்எம்எஸ் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்பது அவசியம். கடிதம் டெலிவரி செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டாலோ அல்லது லாக்கரை வாடகைக்கு எடுத்தவர் காணவில்லை என்றாலோ, வங்கி லாக்கர் வாடகைதாரருக்கோ அல்லது லாக்கரில் வைத்திருக்கும் பொருட்களுடன்  தொடர்புடையவருக்கோ, நோட்டீஸிற்கு பதிலளிக்க நியாயமான கால அவகாசம் அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

வங்கியின் அதிகாரி மற்றும் இரண்டு சுயாதீன சாட்சிகள் முன்னிலையில் லாக்கரை திறக்க வேண்டும் என்றும், அதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றும்  வழிகாட்டுதல்களில் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களில், வங்கிகளின் அலட்சியம் காரணமாக லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான அவர்களின் பொறுப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கு வங்கிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இயற்கை பேரிடர், அதாவது, பூகம்பம், வெள்ளம், மின்னல், புயல் மற்றும் சூறாவளி போன்றவற்றினால் ஏற்படும் எந்த இழப்பிற்கும் வங்கி பொறுப்பேற்காது. இருப்பினும் வங்கிகள் இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாக்க தகுந்த ஏற்பாடுகளை உறுதி செய்திருக்க வேண்டும்.

லாக்கர்கள் இருக்கும் வளாகத்தின் பாதுகாப்பின் முழுப் பொறுப்பும் வங்கியிடமே இருக்கும். ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, வங்கி ஊழியர்களின் அலட்சியம் காரணமாக, தீ, திருட்டு, கட்டிடம் இடிந்து விழுந்தால் அல்லது மோசடி நடந்தால், வங்கிகளின் பொறுப்பு அவர்கள் லாக்கருக்காக வசூலிக்கும் ஆண்டு வாடகையின் 100 மடங்கு என்ற அளவில் இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும்.

மேலும், மக்கள் சட்டவிரோதமான பொருட்களை லாக்கரில் வைத்திருப்பின், வங்கிகள் நடவடிக்கை எடுக்க, ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

மேலும் படிக்க:

Atmanirbhar: ரூ.11,040 கோடி செலவில், ஆயில் பாம் மிஷன்

மின்னல்வேகத்தில் ஒமிக்ரான் பரவல் - கோவில்களில் புத்தாண்டு வழிபாடுக்கு அனுமதி?

English Summary: RBI's new rules take effect! Will it affect the common people? Published on: 29 December 2021, 12:34 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.