தேர்வு எழுதாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் உடல்நலக்குறைவு, எதிர்பாராத சம்பவம் உள்ளிட்டத் தவிர்க்க முடியாதக் காரணங்களால்
பொதுத் தேர்வு எழுதத் தவறிய மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
திட்டமிட்டபடி தேர்வுகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாகப் 10 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் சரியாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் திட்டமிட்டபடி இந்த ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில், சுமார் 6.70 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 10-ம் வகுப்பு தேர்வில் மட்டும் 2.25 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், தேர்வு எழுதாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சுற்றறிக்கை
இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மறுதேர்வில் பங்கேற்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல், 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களும் மறுதேர்வு எழுத நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே மாணவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க...
ரயிலில் லக்கேஜிற்கு 6 மடங்கு அபராதம்- பயணிகளே உஷார்!
பொது இடத்தில் 'ஊதினால்' ரூ.2,000 அபராதம் - ஆண்கள் கவனத்திற்கு!
Share your comments