கூட்டணி அமைத்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும். திமுகவிற்கு எதிராக கூட்டணி அமைப்பதற்காக எப்போதும் நேசகரம் நீட்டுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி தலைமை குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கண்முன்னே வடிகால் வாய்க்கால் குழிகள் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் 80 சதவீதம், 85 பணிகள் முடிந்து உள்ளதாக திமுக கூறி வருகின்றது. அவர்களுக்கு பிரசண்டேஜ்தான் ஞாபகம் வருகிறது. மக்களிடம் அவர்கள் உண்மையைக் கூறி இருக்கலாம், அதனால்தான் மக்கள் கோவப்படுகிறார்கள். மக்களை ஏமாற்றாமல் முடிந்ததை செய்யுங்கள். மக்கள் அனுமதித்தால் தொடர்ந்து ஆட்சி செய்யுங்கள், இல்லை என்றால் வழி விட்டு செல்லுங்கள் என தெரிவித்த அவர், மதவாதத்தை திமுக கூட்டணி குறிப்பாக திருமா போன்றவர்கள் கைவிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான தமிழக அரசிடமும், மத்திய அரசாங்கத்திடம் பேசி அதற்கான போராட்டங்களை நடத்தி பெற்று தர வேண்டும். இல்லையென்றால் அதற்கான பலனை 24 தேர்தலில் அனுபவிப்பார்கள்' என்றார்.
மேலும் தொடர்ந்து பேசுகையில், ‘இன்றைக்கு திமுக வரம்பு மீறி, தவறான ஆட்சி செய்யும் போது மூக்கணாங்கயிறு போல் இந்த கவர்னர் தேவைதான்’ என்றார்.
தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து அவர் பேசுகையில், ‘திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என்றால், அம்மாவின் தொண்டர்கள் அனைவரும், யாராக இருந்தாலும் சரி, எங்கிருந்தாலும் சரி, எந்த மெகா கூட்டணி அமைப்பவராக இருந்தாலும் சரி, மற்றவர்களைப் பார்த்து கேவலமாக பேசுறவராக இருந்தாலும், கூட்டணி அமைத்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும். திமுகவிற்கு எதிராக கூட்டணி அமைப்பதற்க எப்போதும் நேசகரம் நீட்டுவோம்’ என்று தெரிவித்தார்.
மேலும் கூட்டணி தலைமை குறித்து அந்த நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க:
Share your comments