தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் டெக்னீசியன் பிரிவில் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபருக்கு குறைந்தபட்சம் ரூ.19,900மும், அதிகபட்சமாக ரூ.63 ஆயிரம் வரையிலும் மாத ஊதியம் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில்: தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் டெக்னீசியன் பிரிவில் மொத்தம் 79 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதன்படி எலக்ட்ரிக்கல் 17, இன்ஸ்ட்ருமென்டேசன் 11, கம்ப்யூட்டர் 11, ஃபிட்டர் 5, சிவில், வெல்டிங் தலா 4, மெஷினிஸ்ட் 3, மெக்கானிக், டூல் டை மேக்கர், டீசல் மெக்கானிக், டர்னர், சீட் மெட்டல், கிளாஸ் பிளவர், ஏசி தலா 1 பணியிசம் காலியாக உள்ளது, இதனை தற்போது வெளிவந்த அறிவிப்பு மூலம் நிறைவுற்றவுள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் குறிப்பிட்ட பிரிவில் IDI படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அதோடு விண்ணப்பத்தாரர்கள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயதும், ஒபிசி பிரிவினருக்கு 3 வயதும் தளர்வு உண்டு. விண்ணப்பத்தாரர்களின் வயது 03.07.2022ம் தேதியின்படி கணக்கீடு செய்யப்படும். டிரேடு டெஸ்ட்டில் தேர்வாகும் நபர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதில் வெற்றி பெறுவோருக்கு பணி வாய்ப்பு கிடைக்கும்.
மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.19,900 முதல் அதிகபட்தமாக ரூ. 63 ஆயிரத்து 200 வரை கிடைக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் http://www.nplindia.org/index.php/recruitments/ லிங்கை கிளிக் செய்து Application Form அல்லது http://www.nplindia.org/wp-content/uploads/2022/06/Application-Form-Open.pdf, இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் இணைத்து குறிப்பிட்ட தேதிக்கு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு, இந்த அஞ்சல் முகவரி அதாவது Administration, CSIR-National Physical Laboratory, Dr.K.s Krishnan Marg, New Delhi - 110012 அடுத்த மாதம் ஜூலை 3 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
வங்கிக்கணக்கில் வந்த ரூ.1.42 கோடி சம்பளம்- தப்பியோடிய ஊழியர்!
மேலும் கூடுதல் விவரங்களை http://www.nplindia.org/wp-content/up-loads/2022/06/Advt-3-2022-English.pdf லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க:
News Update: நாளை மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கான எச்சரிக்கை
Share your comments