1. செய்திகள்

கேரளா செல்ல கெடுபடி குறைப்பு : ஏலக்காய் தோட்ட விவசாய தொழிலாளர்கள் மகிழ்ச்சி!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Kerala
Credit : Business Line

கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து, ஆறு மாதத்திற்கு பின் தமிழக விவசாயிகள் கேரளா செல்ல 3 வகையான தளர்வுகளுடன் இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரானா ஊரடங்கு (Corona Lockdown)

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கரில் வாசனை பயிரான ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில், 70 சதவீத தோட்டங்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த தமிழர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்த தோட்டங்களில் பணிபுரிய தமிழக தொழிலாளர்கள் தினசரி ஜீப்களில் சென்று வந்தனர்.

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 25 முதல் தமிழகத்தை சேர்ந்த ஏலத்தோட்ட விவசாயிகள், தொழிலாளர்கள் கேரளா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், அதிக கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் வழங்கப்பட்டதால் விவசாயிகள், தொழிலாளர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தற்போது 6 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தை சேர்ந்தவர்கள் கேரளா செல்லும் வகையில், சில தளர்வுகளுடன் கூடிய இ-பாஸ் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக கேரள அதிகாரி ஒருவர் கூறியதாவது, தமிழகத்தை சேர்ந்தவர்கள் வருவதற்கும், வந்து செல்வதற்கும், கேரளாவில் வந்து தங்கி வேலைபார்ப்பதற்கும் கேரள அரசு தளர்வுகளுடன் 3 வகையான இ-பாஸ் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ரெகுலர் இ-பாஸ் (Regular E-Pass)

  • கேரளாவுக்கு வேலைக்கு வரும் தொழிலாளி ஆதார் மூலம் 30 நாட்களுக்கு விண்ணப்பித்து ரெகுலர் இ-பாஸ் (Regular E-Pass) பெறலாம். முதல் நாளில் மட்டும் சான்றிதழ் சரி பார்த்து டோக்கன் வழங்கப்படும். அடுத்த நாள் முதல் டோக்கன் எண்ணை மட்டும் பதிவு செய்து கேரளா வரலாம். காலையில் சென்று மாலைக்குள் திரும்ப வேண்டும். தனிமைப்படுத்துதல் கிடையாது.

ஷார்ட் டைம் இ-பாஸ் (Short-time E-Pass)

  • தமிழக விவசாயிகள், தொழிலாளர்கள் ஏலத்தோட்டங்களில் 7 நாள் தங்கி வேலை செய்ய ஷார்ட் டைம் இ-பாஸ் (Short-time E-Pass) வழங்கப்படுகிறது. தனிமைப்படுத்துதல் கிடையாது.

டொமெஸ்டிக் இ-பாஸ் (Domestic E-Pass)

  • கேரளாவில் விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செல்லும் தமிழக தொழிலாளர்கள் 6 மாதம் தங்கி பணிபுரிய டொமெஸ்டிக் இ-பாஸ் (Domestic E-Pass) வழங்கப்படுகிறது. இவர்களுக்கு 7 நாள் தனிமை உண்டு. அதன்பின் பணி செய்யலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கேரள அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க...

புதிய ரக பயிர்களின் வாழ்வியல் குறித்து வளக்கும் பல்பயிர் பூங்கா!

குறைந்த வாடகையில் விவசாய இயந்திரங்கள் - சூப்பரான திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர்

PM Kisan Update : ரூ.2000 பணம் உங்களுக்கு வந்துவிட்டதா? இல்லையா? உடனடியாக சரிபாருங்கள்!

அதிக மகசூல் அள்ளித்தரும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை! - விவசாயிகள் ஆர்வம்!

English Summary: Relaxation to go to Kerala: Tamil Nadu cardamom plantation workers happy! Published on: 07 October 2020, 08:58 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.