கடந்த ஆண்டு இறுதியில் தமிழகத்தில் வீசிய நிவர் (Nivar) மற்றும் புரெவி (Burevi) புயல்களால் விவசாயப் பயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏற்ப தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். வேளாண் துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு, பயிர் பாதிப்பு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில், நிவர், புரெவி புயல் மற்றும் அதிக மழையால் (Heavy Rain) பாதித்த 25 ஆயிரத்து 628 விவசாயிகளுக்கு 15.72 கோடி ரூபாய், நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
1,626 எக்டேர் பயிர்கள் பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில், வேளாண் பயிர்கள் கடந்தாண்டு நவம்பர் மாதம் நிவர் புயலாலும் (Nivar Storm), டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் புரெவி புயலாலும் (Burevi Storm) பாதித்தது. இதையடுத்து, கடந்த ஜனவரியில் பெய்த மழையாலும் சாகுடி (Cultivation) பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயலால் நெற்பயிர் 646 எக்டேரும் , பயறு வகைகள் 868 எக்டேரும் , எண்ணெய் வித்துக்கள் 35 எக்டேரும் , கரும்பு் 77 எக்டேர் என மொத்தம் 1,626 எக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டதால் 2 ஆயிரத்து 932 விவசாயிகள் பாதித்தனர்.
வங்கி கணக்கில் வரவு
பயிர் பாதிப்பிற்கு, இறவை பயிர்களுக்கு எக்டேரும் 20 ஆயிரம் ரூபாயும், மானாவாரி பயிர்களுக்கு எக்டேரும் 10 ஆயிரம் ரூபாயும் வழங்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, 2 ஆயிரத்து 827 விவசாயிகளுக்கு, 1,541 எக்டேர் பயிர் பாதிப்பு நிவாரணமாக 2.42 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் (Bank Account) வரவு வைக்கப்பட்டுள்ளது. புரெவி புயலால், விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 15,643 விவசாயிகளின் 7,317 எக்டேர் சாகுபடிக்கு 10.02 கோடி ரூபாய் நிவாரணமாக (Relief fund) விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையால் நெல், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு என மொத்தம் 12,012 எக்டேர் பாதிக்கப்பட்டது. இதனால் 29 ஆயிரத்து 757 விவசாயிகள் பாதித்தனர். அதிக மழையால் பயிர் பாதிப்பிற்கு நிவாரணமாக தற்போது வரை 25,628 விவசாயிகளுக்கு, 15.72 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பயிர் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
Share your comments