வேரோடு சாய்ந்த மரங்களை மீண்டும் நடவு செய்தால் காய்க்கும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் சாய்ந்த மரங்களை நடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவர்கள் கூறியதாவது: புயலால் முறிந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவே மரத்துக்கு ரூ.1000 வீதம் செலவாகிறது. வேரோடு சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தாமல் மீண்டும் நடவு செய்தால் மீண்டும் காய்க்கும் என வாட்ஸ்அப் மூலம் தகவல் வந்தது. இதை நம்பி மரங்களை நடவு செய்து வருகிறோம்.
இதற்காக சுமார் 15 ஆண்டுகளுக்குள்ளான, வேரோடு சாய்ந்த மரங்களின் மட்டைகளை நீக்கிவிட்டு, பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 10 அடி குழி தோண்டி அதில், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து, இடுபொருட்கள் இட்டு மரம் நடப்படுகிறது. நாளொன்றுக்கு அதிகபட்சமாக 20 மரங்கள் நடப்படுகின்றன. இதற்கு மரத்துக்கு தலா ரூ.1000 வீதம் செலவாகிறது. பரீட்சார்த்த முறையில்தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வேரோடு சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தாமல் மீண்டும் நடவு செய்தால் மீண்டும் காய்க்கும் என வாட்ஸ்அப் மூலம் தகவல் வந்தது. இதை நம்பி மரங்களை நடவு செய்து வருகிறோம்.
Share your comments