வங்கிக் கடன் வாங்கியோருக்கு ஏற்கெனவே ரெப்போ வட்டி உயர்வால் கடன் EMI தொகை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என சர்வதேச அளவில் சிக்னல் வெளியாகியுள்ளது. இதனால், வங்கிக் கடன் வாங்கியோருக்கு EMI சுமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி உயர்வு (Interest hike)
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திக்கொண்டே வருகிறது. கடந்த மே மாதம் 4% ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம் இப்போது 6.50% வரை உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை படிப்படியாக உயர்த்தி வந்தபோது, அதற்கேற்ப வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வங்கிக் கடன்களுக்கான அடிப்படை வட்டியை உயர்த்தி வந்தன. இதனால், வங்கிக் கடன் வாங்கியோருக்கு EMI அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் மீண்டும் பணவீக்கம் உயர்ந்துள்ளதால், எதிர்பார்க்கப்பட்டதை விட வட்டி விகிதம் அதிகமாக உயர்த்தப்படும் என ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்பது உறுதியாகிவிட்டதால், இந்தியாவிலும் ரிசர்வ் வங்கி மீண்டும் ஒரு முறையாவது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
EMI உயரும்
ஏற்கெனவே வங்கிக் கடன் வாங்கியோருக்கு ரெப்போ வட்டி உயர்வால் EMI செலவு உயர்ந்துவிட்டது. இந்நிலையில், மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் EMI சுமை மேலும் அதிகரிக்கும்.
மேலும் படிக்க
Share your comments