பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் அமேசானும் ஒன்றாகும். இந்த ஷாப்பிங் தளமானது உலக புகழ்பெற்றது என்று சொன்னால் அது மிகையாகது. அவ்வாறு புகழ் பெற்ற ஷாப்பிங் தளமான அமேசானில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு விறபனை நடந்து வருகிறது. Amazon-இல் (iQOO Republic Day Sale) என்ற தலைப்பில் இது, நடந்து வருகிறது, அதில் உங்களுக்கு ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதைப் பற்றிய தகவல், விலை மற்றும் சலுகைகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இன்று நாம் ஸ்மார்ட்போன் பிராண்டான iQOO இன் சிறந்த ஸ்மார்ட்போன்களைப் பற்றி விவரம் பார்க்க உள்ளோம், அதை நீங்கள் மிகப்பெரிய தள்ளுபடியில் வாங்க முடியும். இந்த ஒப்பந்தங்களின் முழு விவரத்தை பார்ப்போம்.
29 ஆயிரம் மதிப்பிலான 5ஜி போனை ரூ.3,500க்கு வாங்குங்கள்
iQOO Z5 5G வாங்கினால், மொத்தமாக 26 ஆயிரம் ரூபாய் சேமிக்கலாம். இந்த போனின் சந்தை விலை ரூ.29,966 ஆகும். அவ்வாறு இருக்க, இந்த ஸ்மார்ட்போன் அமேசான் விற்பனையில் அதாவது (Republic Day sale-இல்) ரூ. 5,976 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.23,990க்கு விற்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில், நீங்கள் இரண்டாயிரம் ரூபாய் கூப்பன் தள்ளுபடி பெறுகிறீர்கள். மேலும், நீங்கள் OneCard கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் ரூ.1500 வரை அதாவது 5% உடனடி தள்ளுபடியும் பெறுவீர்கள், மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் ரூ.17,450 வரை சேமிக்கலாம்.
இந்த இரண்டு சலுகைகளின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ஒட்டுமொத்தமாக, இந்த டீலில் ரூ.26,016 தள்ளுபடி கிடைக்கும், இது போனின் விலையை ரூ.3,950 ஆக குறைக்கும். உங்கள் போன் புது மாடலாக இருத்தல் வேண்டும், அவ்வாறு இருப்பின் மட்டும் நீங்கள் எக்ஸ்சேன்ச் ஆஃபரை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடதக்கது.
iQOO 7 5Gயிலும் உடனடி தள்ளுபடியைப் பெறும் வாய்ப்பு உள்ளது
iQOO 7 5G சந்தையில் ரூ. 34,989க்கு விற்கப்படுகிறது, ஆனால் அமேசானின் விற்பனையில் நீங்கள் ரூ.29,990க்கு வாங்கலாம். உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இதை வாங்கினால், ரூ.19,950 வரை தள்ளுபடி பெறலாம், இந்த போனின் விலை உங்களுக்கு ரூ.10,040 ஆக குறையும். வங்கிச் சலுகைகளும் இதில் வழங்கப்படுகின்றன, நீங்கள் விரும்பினால், EMIயிலும் வாங்கிடலாம்.
மேலும் படிக்க:
வறட்சி மற்றும் நீர் நிலைகளை சமாளிக்க திட்டங்கள் தயார், ரூ.494 கோடி ஒப்புதல்
உர மானியம் 2022: பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு, உர மானியத்தின் நிலவரம் என்ன?
Share your comments