தர்மபுரி மாவட்டத்தில் தென்னை மற்றும் மாமரங்கள் அதிகளவில் காணப்படுகிறது. இதனால், தேங்காய் மற்றும் மாம்பழ சாகுபடி சிறப்பான முறையில் நடந்து வருகிறது. மேலும் புதிதாக தென்னை, மா கன்றுகள் நட, தமிழக அரசு முழு மானியத்தில் (Full Subsidy) கடனுதவி வழங்க வேண்டும் என, விவசாயிகள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
முழு மானியத்தில் நடவு:
தர்மபுரி மாவட்டத்திற்கு, பெருமை சேர்க்கும் வகையில், மா மற்றும் தென்னை சாகுபடி (Coconut Cultivation) திகழ்ந்து வந்தது. மாவட்டத்தில் கடந்த, இரு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடும் வறட்சியால், சுமார் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்திருந்த, தென்னை மற்றும் மா மரங்கள் காய்ந்தன. இதனால், இப்பயிர்களை நேரடியாக மற்றும் மறைமுகமாக நம்பியிருந்த, பல ஆயிரம் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் கடந்தாண்டு தென்மேற்கு பருவமழையும் (South West Monsoon), நடப்பு மாதம் வரை வடகிழக்கு பருவமழையும் (Northeast monsoon) குறிப்பிடத்தக்க வகையில் பெய்துள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள தென்னை மற்றும் மாமர விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த, தமிழக அரசு, வறட்சியால் காய்ந்த தென்னை, மா மரங்களுக்கு பதில், புதிய மரக்கன்றுகள் (Fresh saplings) நடவு செய்ய, முழு மானியத்தில் கடனுதவி வழங்க வேண்டும் என, தர்மபுரி மாவட்ட விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு உடனடியாக முழு மானியத்தை அறிவிக்க வேண்டும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தொடர் மழையிலும் தாக்குப்பிடிக்கும் புதிய நெல் ரகங்களை கண்டுபிடிக்க கலெக்டர் வலியுறுத்தல்!
Share your comments