நெல் வயல்களில் உளுந்து சாகுபடி மேற்கொள்ள தேவையான இடுபொருள் வழங்க வேளாண் துறை முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உளுந்து சாகுபடி
கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. இருபோக நெல் சாகுபடி பருவமழை பொய்த்து வருவதால், ஒருபோக நெல் சாகுபடியாக மாறியது. ஆனால் இந்தாண்டும் மீண்டும் இரு போகம் செய்ய ஏதுவான சூழல் ஏற்பட்டுள்ளது. இரண்டாம் போகம் அறுவடைக்கு பின் உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்வது வழக்கமாகும். பயறு வகை சாகுபடியால் நிலத்திற்கு தேவையான உரம் இயற்கையாக கிடைக்கும். விவசாயிகளுக்கு நெல்லில் கிடைக்கும் லாபத்துடன், உளுந்து சாகுபடி செய்வதால், கூடுதல் லாபம் கிடைத்து வந்தது.
இருபோக சாகுபடி
பராமரிப்பு செலவு அதிகரித்தால் பல ஆண்டுகளாக உளுந்து சாகுபடியை விவசாயிகள் கைவிட்டுள்ளனர். விவசாயிகள் கூறுகையில், ‛ கடந்த காலங்களில் இருபோக சாகுபடி திட்டமிட்டபடி குறிப்பிட்ட காலத்திற்குள் செய்ய முடியவில்லை. லாபத்தை காட்டிலும் கூடுதல் செலவுகள் ஆவதால், உளுந்து, பாசிப்பயறு சாகுபடியை கைவிட்டோம். இந்தாண்டு அணையில் போதிய தண்ணீர் இருப்பதால் உளுந்து சாகுபடி செய்ய இடுபொருள்கள், விதைகள் வழங்க வேண்டும். பயறு வகைகள் சாகுபடி திட்டம் செயல்படுத்தினாலும் உளுந்து சாகுபடியை ஊக்குவிக்க வேளாண் துறை முன்வர வேண்டும்' என்றனர்.
மேலும் படிக்க
ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் : அமைச்சர் அறிவிப்பு!
சீசனில் மகசூல் தரும் செண்டுமல்லி! விலை கிடைத்தால் குறையாத வருமானம்!
Share your comments