1. செய்திகள்

கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி அதிரடி!

R. Balakrishnan
R. Balakrishnan
Reserve Bank

வங்கி விதிமுறைச் சட்டங்களை மீறும் வங்கிகளுக்கு அபராதம் விதிப்பதும், அவற்றின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதும் ரிசர்வ் வங்கியின் வழக்கமான நடவடிக்கைதான். அந்த வகையில் தற்போது சில கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் பிடியில் சிக்கியுள்ளன.

ரிசர்வ் வங்கி (Reserve Bank)

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூருவைச் சேர்ந்த கர்நாடகா மாநில கூட்டுறவு அபெக்ஸ் வங்கிக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு நிதி தொடர்பான வங்கி விதிகளுக்கு இணங்காததற்காக இந்த வங்கிக்கு தண்டனை கிடைத்துள்ளது.

இது தவிர அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கி பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளரின் நலனைக் கவனிக்கவில்லை என்பதற்காக தானே பாரத் சககாரி வங்கிக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜான்சியில் உள்ள ராணி லக்ஷ்மிபாய் நகர கூட்டுறவு வங்கிக்கு ரூ.5 லட்சமும், தஞ்சையில் உள்ள நிக்கல்சன் கூட்டுறவு டவுன் வங்கிக்கு ரூ.2 லட்சமும், ரூர்கேலாவில் உள்ள தி அர்பன் கூட்டுறவு வங்கிக்கு ரூ.2 லட்சமும் ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

அபராதம் (Penalty)

விதிகளை மீறியதன் அடிப்படையில் இந்த கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதற்காக 8 கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்தது. விசாகப்பட்டினம் கூட்டுறவு வங்கிக்கு அதிகபட்சமாக ரூ.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

மேலும் படிக்க

EMI கட்டுவோர்க்கு அதிர்ச்சி: வட்டியை அதிகரித்த கனரா வங்கி!

LIC புதிய பென்சன் திட்டம்: அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!

English Summary: Reserve Bank action by imposing penalty on co-operative banks! Published on: 07 September 2022, 12:26 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.