கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வார்டுகளை தயார் நிலையில் வைக்க அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்றால் அதிகளவு பாதிப்பு இருந்தது. மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கை மற்றும் கொரோனா தடுப்பூசியை துரிதப்படுத்தியதால் பாதிப்பு குறைந்தது.
கொரோனா வைரஸ் (Corona Virus)
தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து மாநில சுகாதார துறையும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது.
சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில்,'மாநிலத்தில் கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி முகாம்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் வார்டுகளை தயார் நிலையில் வைக்கவும், தேவையான கருவிகள், ஆக்ஸிஜன் படுக்கைகளை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது' என்றனர்.
கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், கோவை அரசு மருத்துவமனையில் ஏற்கனவே, 20 படுக்கைகளுடன் கூடிய வார்டு உள்ளது. இதில் போதுமான ஆக்ஸிஜன் படுக்கைகளும் உள்ளன. தேவைப்பட்டால், கூடுதல் வார்டுகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
மேலும் படிக்க
இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க இந்த விதைகளை சாப்பிடுங்கள்!
Share your comments