நவீன உலகில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் கடலுக்கடியில் அதிகளவு சேர்ந்துள்ளது. இந்நிலையில், கடலுக்கடியில் உள்ள நுண் பிளாஸ்டிக் துகள்களை துவம்சம் செய்ய புதிய மீன் ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீன் ரோபோ (Fish Robo)
மைக்ரோபிளாஸ்டிக்கை உறிஞ்சும் மீன் போன்ற ரோபோவை சீன விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் உள்ள சிச்சுவான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மாசுபட்ட கடல்களை சுத்தம் செய்ய இந்த ரோபோவை கண்டுபிடித்துள்ளனர். தொடுவதற்கு மிகவும் மென்மையாக இருக்கும் இந்த ரோபோக்கள் 1.3 சென்டிமீட்டர் (0.5 அங்குலம்) அளவு கொண்டவை.
ஆழமான நீரில் மைக்ரோபிளாஸ்டிக்கை உறிஞ்சவும், கடல் மாசுபாட்டை பகுப்பாய்வு செய்வதற்கான தகவல்களை வழங்குவதையும் இலக்காக கொண்டு இந்த ரோபோக்களை உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ரோபோ மீன், ஒளியால் கதிரியக்கப்படுகிறது. ஒளியைப் பயன்படுத்தி இந்த ரோபோ மீன்களை மற்ற மீன்கள் அல்லது கப்பல்களில் மோதுவதைத் தவிர்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க
10 மாதக் குழந்தைக்கு ரயில்வே வேலை: வரலாற்றில் இதுவே முதன்முறை!
Share your comments