குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலில், குடிசை வீடுகளில் ,மற்றும் 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக, தகவல் கசிந்துள்ளது.
தமிழக மின் வாரியம், குடிசை வீடுகளுக்கு இலவசமாகவும் மற்ற அனைத்து வீடுகளுக்கும், 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கி வருகிறது. இதற்காக ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக அளித்து வருகிறது. தற்போது, 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள் உள்ளன.
இதை இல்லாமல் 2.12 கோடி வீட்டு இணைப்புகளில், 100 யூனிட் வரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 73 லட்சம் என்ற அளவில் உள்ளது. சட்டசபை தேர்தலின் போது, 'ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்' என்று, தி.மு.க தேர்தல் வாக்குறுதி அளித்தது. உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, எதிர்க்கட்சிகள், அரசுக்கு அழுத்தம் அளித்து வருகின்றன.
இதனால், அத்திட்டத்திற்கான பயனாளிகளை அடையாளம் காண்பது பற்றி, அரசு தயாராகி வருகிறது. இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் வசதி படைத்த பலர், அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ளனர், ரேஷன் கார்டை மட்டும் அடிப்படையாக வைத்து, உரிமை தொகை வழங்குவதற்கான பயனாளிகளை தேர்வு செய்வது கடினம். பயனாளிகளை அடையாளம் காண்பதில், பல அம்சங்கள் ஆராயப்படுகின்றன என்றார்.
வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கெடுக்கப் படுகிறது. இதனால், இரு மாதங்களுக்கும் சேர்த்து, 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோர், அதிக வருவாய் ஈட்ட வாய்ப்பில்லை. எனவே, உரிமை தொகை வழங்குவதற்கான மொத்த பயனாளிகளில், குடிசை மற்றும், 100 யூனிட்டுக்கு கீழ், மின்சாரம் பயன்படுத்துவோர் மட்டும் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க:
ஆடிப்பட்ட பயிர்களை தாக்கும் நோய்கள்: கட்டுப்படுத்தும் முறை
வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி- TNAUவில் ஏற்பாடு!
Share your comments