கொரோனா நெருக்கடி காலத்தில், விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஜனசங்க தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு காணொலிக் காட்சி வழியாக பேசினார். அதில், இந்தியாவை ஒரு சிறந்த நாடாகவும் மற்றும் சமூகம் ஆகவும் உருவாக்குவதில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய்ஜி மேற்கொண்ட பங்கு பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், முன்பிருந்த அரசுகள் புரிந்து கொள்ள சிக்கலான வலை பின்னல்போன்ற உறுதிமொழியையும், சட்டங்களையும் அளித்ததாகவும், அதனை, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து மாற்ற முயற்சித்து வருவதாக தெரிவித்தார். விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திருத்தங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளதாக கூறினா்.
கடந்த சில ஆண்டுகளில், விவசாயிகளை வங்கிகளுடன் இணைக்க முழு முயற்சிகளை எடுத்ததாகவும், இந்த கொரோனா நெருக்கடியில் விசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
விவசாயிகளின் நலனை மேம்படுத்த கிசான் கிரெடிட் கார்டுகளை அதிக அளவிலான விவசாயிகளுக்கு வழங்கும் முயற்சியை பாஜக அரசு மேற்கொண்டுள்ளதாகவும், இதன் மூலம், அவர்களுக்கு வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் மோடி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு உர மானியமாக ரூ.5,000 வழங்கலாம் - CACP பரிந்துரை!!
தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
Share your comments