சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. புதிய கல்விக் கொள்கையை எதற்காக எதிர்க்கிறோம் என மத்திய கல்வி அமைச்சருக்கு எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளோம். கல்வித்துறை இணையமைச்சர் என்பதால், சுபாஸ் சர்க்காருக்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழக அரசு சார்பில் புதிய கல்வி கொள்கை விரைவில் வெளியாகவுள்ளது என தெரிவித்தார்.
பொதுத்தேர்வு (Public Exam)
இதன்பின் பேசிய அவர், 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்தால் இடைநிற்றல் அதிகரிக்கும். 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதே போதுமானது என்றும் கூறினார். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விரைவில் PG Admission தொடங்கும் என்றும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
1,000 ரூபாய் (1000 Rupees)
தாய்மொழி தமிழும், International Language ஆங்கிலமும் இருக்கும் போது 3-வது மொழி எதற்கு? என கேள்வி எழுப்பிய அமைச்சர், 3-வது மொழி கற்க வேண்டுமானால் கற்றுக்கொள்ளலாம். ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது. தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக்கொள்கை தான் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது என்றும் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
இதனிடையே, மாநிலத்தின் நிதிநிலை பிரச்சனை சரி செய்ததும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அத்திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் தான் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்திருந்தார்.
மேலும் படிக்க
பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடி: சூப்பர் ஆஃபர்!
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி உத்தரவு.!
Share your comments