தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் பாதிப்பால் இழப்பைச் சந்தித்த சுமார் 13,000 விவசாயிகளுக்கு முதல் கட்டமாக சுமார் 16.48 கோடி வெள்ள நிவாரணம் நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
பயிர் பாதிப்பு
தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் எதிர்பாராத வகையில் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின, தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டத்தில் 1.04 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வேளாண்மை பயிர்கள், 17 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்கள் என மொத்தம் 1.21 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிர்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், இந்த பயிர்கள் அனைத்துக்கும் நிவாரணம் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. படிப்படியாக நிவாரண தொகை ஒதுக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல் கட்டமாக 12,984 விவசாயிகளுக்கு ரூ.16,48,95,993 நிவாரணம் அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் வீடு வீடாக ஆய்வு நடத்தி டெங்கு கொசுப்புழுக்களை கண்டறிந்து அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சல் நோயாளிகள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு, காய்ச்சல் உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகளில் தீவிர ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கொரோனா பாதிப்பை பொறுத்தவரை நோய் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ள 5 மாவட்டங்களில் தான் தூத்துக்குடி மாவட்டம் இருக்கிறது. இங்கு கொரோனா தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை 0.3 சதவீதம் என்ற அளவில் தான் உள்ளது என்றார்.
நலத்திட்ட உதவி வழங்கள்
முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது, வருவாய்த்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ரூ.19,82,266 மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, தையல் இயந்திரம், ஸ்திரிப் பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
மேலும் படிக்க...
சிலிண்டர் மானியம் பெற, SMS மூலம் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
சிறு, குறு தொழில் முனைவோருக்கு ஜாக்பாட்! முதலீட்டு மானியம் 3 மடங்காக அதிகரிப்பு!
மரவள்ளி சாகுபடியை அதிகரிக்க கீழ்காணும் ஆலோசனைகள் பின்பற்றுங்கள்! - வேளாண் பல்கலை தகவல்!
Share your comments