1. செய்திகள்

Loan Waiver: விருதுநகரில் ரூ.193.95 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 26,275 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.193.95 கோடி வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது தேவைகள் மற்றும் குறைகளை மாவட்ட ஆட்சியருடன் கூறினர். பின்னர் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் கண்ணன் உத்தரவிட்டார்.

கூட்டத்திற்குப் பின் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, காரியாபட்டி வட்டாரத்தில் வேப்பங்குளம் மற்றும் முடுக்கன்குளம் கிராமங்களில் செயல்திட்ட விளக்கத்திடல்களில் பிரியாணி அரிசியாகப் பயன்படும் வைகை-1 நெல் ரகம் பயிரிடப்பட்டு நல்ல மகசூல் தருகிறது, எனவே மாநில விதைப்பண்ணையில் அதிகமாக விதை நெல்லை உற்பத்தி செய்து மாவட்ட விவசாயிகளுக்கு அடுத்த பருவத்தில் வைகை-1 ரக விதை நெல் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்

ரூ.17.66 கோடி நிவாரணத்தொகை 

பிரதமர் பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் அனைத்து பயிர்களுக்குமான பயிர்க் காப்பீடு அந்தந்த வருடத்தில் உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

வடகிழக்கு பருவ மழை, நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாகப் பயிர் இழப்பைச் சந்தித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகப் பொருட்டு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு ரூ.17.66 கோடி நிவாரணத்தொகை பெற அறிக்கை அனுப்பப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்பிற்கு நிவாரணம்

வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தினை தடுக்கும் வகையில் வட்ட அளவிலான துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் சேத விவரத்தினை அலுவலர்களுக்குத் தெரிவிக்கும் பட்சத்தில் வேளாண்மை தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் இனைந்து ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வழிவகை செயல்படுத்தப்படும்.

விவசாயிகள் பயன்பெற அழைப்பு

வேளாண் பொறியியல் துறை மூலம் சோலார் மின்வேலி அமைத்தல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல் மற்றும் வேளாண் கருவிகள் வாங்குவதற்கு விவசாயிகள் விண்ணப்பித்து முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம்.

வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விளக்கப்பட்டு உலர் களம் சேமிப்பு கிடங்கள் அமைப்பதற்கு அரசுக்குத் திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் செய்யப்படும் விவசாயிகளிடமிருந்து செஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. வியாபாரிகளிடமிருந்து மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
நடப்பு வருடத்தில் 19 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது.

193.95 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி

கூட்டுறவுச் சங்கங்களில் பயிர்க் கடன் பெற்ற 26,275 விவசாயிகள் பயன்பெறும் வகையில் சுமார் ரூ.193.95 கோடி அரசு தள்ளுபடி செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க...

புதிய வேளாண் சட்டம் விவசாயிகளை பாதுகாப்பதோடு உரிய விலை பெற்றுத் தரும் - நிர்மலா சீதாராமன் பேச்சு!

மகசூல் விளைச்சலை அளவிட ட்ரோன்களை பயன்படுத்தலாம்! - வேளாண்துறைக்கு அனுமதி!

ஒட்டுண்ணிகள் & இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றிய ஒரு நாள் பயிற்சி முகாம்! - வேளாண் மாணவர்கள் & விவசாயிகளுக்கு அழைப்பு!!

வாடகைக்கு நெல் அறுவடை இயந்திரம் வனியோகம் - விவசாயிகள் பயன்பெற அழைப்பு!!

English Summary: Rs 193.95 crore crop loan waiver done for 26,275 farmers in viruthunagar Published on: 21 February 2021, 08:37 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.