அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்படும்போது, மாநில அரசுகளும் அதற்கு ஏற்ப, தங்கள் ஊழியர்களுக்கும் சலுகைகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது, தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது உயர்த்தப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
14 % உயர்வு (14% increase)
தமிழக அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
ரூ.8,724 கோடி (Rs.8,724 crore)
அதாவது வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்குத் தோராயமாக ரூ.8,724 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
ரூ.3000 பொங்கல் பரிசு (Rs.3000 Pongal gift)
மேலும், பொங்கல் பரிசாக சி' மற்றும் டி' பிரிவு பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரமும், ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாயும் வழங்கப்படும்.
சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.500 வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.169.56 கோடி
இதன் காரணமாக அரசுக்கு தோராயமாக ரூ.169.56 கோடி அளவிற்கு செலவினம் ஏற்படும். தமிழக அரசுக்கு நிதிச்சுமை உள்ள இந்த சூழ்நிலையிலும் இந்த உத்தரவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments