கொரோனாத் தொற்று பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தங்களது பொருளாதார நிதிச்சுமையை எதிர்கொள்ள ஏதுவாக அரிசி அட்டை தாரர்களுக்கு ரூ.4,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
வாக்குறுதி (Promise)
சட்டசபைத் தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
பதவி ஏற்பு (posting)
சட்டசபை தேர்தலில் தி.மு.க.அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார்.
அவர் பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாகக் கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். கொரோனா பாதிப்பால் மக்கள் சிரமப்படும் இந்த சூழலில் ரூ.4 ஆயிரத்தில் இந்த மாதமே முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் வகையில் ஆணை பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டது.
முதல்வர் தொடங்கிவைத்தார் (The Chief started)
இந்நிலையில் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
தலைமைச் செயலகத்துக்கு பயனாளிகளை நேரில் வரவழைத்து அவர்களுக்கு ரொக்கப்பணமாக ரூ.2 ஆயிரம் வழங்கினார்.
பணம் (Money)
இதேபோல் ஒவ்வொரு பகுதியிலும் ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையொட்டி இன்று முதல் டோக்கன் வழங்கும் பணி வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் அந்தந்த பகுதிகளுக்கு வந்து ரேஷன் கார்டு எண் அடிப்படையில் டோக்கன் வழங்கி வருகின்றனர்.
விழிப்புணர்வு வாசகமும் (Awareness text)
அந்த டோக்கனில் ரேஷன் கடையின் எண், அட்டைதாரரின் பெயர், நிவாரண நிதி வழங்கும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு உள்ளன. அந்த டோக்கனில் நம்மையும், நாட்டு மக்களையும் காப்போம். தொற்றில் இருந்து மீட்போம் என்கிற கொரோனா விழிப்புணர்வு வாசகமும் இடம்பெற்றுள்ளது.
15ம் தேதி முதல் (From the 15th)
டோக்கன் 12-ந்தேதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கனை பெற்றுக்கொண்டவர்கள் வருகிற 15-ந்தேதி முதல் ரேஷன் கடைகளுக்கு சென்று ரூ.2 ஆயிரம் பணம் பெற்றுக் கொள்ளலாம். டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரப்படி தான் பொதுமக்கள் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் 200 பேருக்கு (For 200 people daily)
கூட்டத்தை தவிர்க்க ஒரு நாளைக்கு 200 பேர்களுக்கு மட்டுமே பணம் வினியோகம் செய்யப்படும். சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் ஒவ்வொரு ரேஷன் கடை முன்பும் வட்டம் வரையப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து ரேஷன் கடைகளில் பணம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இவர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரணம் கிடையாது, தமிழக அரசின் அதிர்ச்சித் தகவல்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி! 5 முனை போட்டியில் வென்று, 6 வது முறைய திமுக ஆட்சி!
Share your comments