ஆதார் கார்டுதாரர்களுக்கு மத்திய அரசு 4.8 லட்சம் ரூபாய் வழங்குவதாக ஒரு தகவலர் வேகமாகப் பரவி வருகிறது. இந்தத் தகவல் உண்மையானதா? என்பதைத் தெரிந்துகொள்ள உள்ளே சென்று படியுங்கள்.
இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு மிக அவசியமான ஆவணமாக இருக்கிறது. இந்நிலையில், ஆதார் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் மத்திய அரசு நிதியுதவி வழங்குவதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.
பரபரப்பு தகவல்
அதாவது, ஆதார் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு மத்திய அரசு 4.78 லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய அரசு விளக்கம்
இந்நிலையில், ஆதார் கார்டுதாரர்களுக்கு 4.8 லட்சம் ரூபாய் கடனை மத்திய அரசு வழங்குவதாக பரவு செய்தி பொய்யானது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதுபோன்ற எந்த அறிவிப்பையும் நிதியமைச்சகம் வெளியிடவில்லை என மத்திய அரசின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை
அதாவது ஆதார் வைத்து 4.8 லட்சம் ரூபாய் கடன் பெறுவதற்கு ஒரு Linkஐ கிளிக் செய்து பதிவு செய்துகொள்ளும்படி கூறப்பட்டுள்ளது. இது மோசடி கும்பல்கள் பயன்படுத்தும் யுக்தி என்பதால் linkஐ கிளிக் செய்யாமல் இருப்பது நல்லது.
ரூ.4.8 லட்சம்
ஆதார் கார்டுக்கு 4.8 லட்சம் ரூபாய் கடன் கிடைக்கும் என்ற தகவல் பொய்யானது எனவும், இதுபோன்ற எந்த அறிவிப்பையும் நிதியமைச்சகம் வெளியிடவில்லை எனவும், இந்த பொய் செய்தியை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம் எனவும், சொந்த விவரங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் பத்திரிகை தகவல் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
தேசத்தின் சிறந்த முதல்வர்கள் பட்டியல் - 3ம் இடத்தில் மு.க.ஸ்டாலின்!
Share your comments