சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு 496 ரூபாய் குறைந்திருப்பது, வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆவணி மாதத்தில் திருமணம் நடத்தத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த விலை வீழ்ச்சி, பலன் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 8 நாட்களாக தங்கத்தின் விலை ஏறி, இறங்கி வருகிறது. குறிப்பாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில், தற்போது மாற்றம் காணப்படுவது சிறு ஆறுதலாக உள்ளது.
விலையில் வீழ்ச்சி
ரஷ்யா- உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியது. இதனால், போர் தொடங்கியது முதலே தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நிலவி வருகிறது. பெரும்பாலும் விலை அதிகரித்து வந்தது. இதனிடையே பங்குச்சந்தைகளில் உயர்வு தொடர்வதால், தங்கம் விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது.
496 ரூபாய்
கடந்த 10ம் தேதி ரூ.4,689ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை, நேற்று ரூ.4,627 ஆக இருந்தது. அதாவது கிராமுக்கு 62 ரூபாய் வீதம், சவரனுக்கு 496 ரூபாய் குறைந்திருந்தது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உயர்வு
இந்நிலையில் எதிர்பார்ப்புக்கு மாறாக, இன்று தங்கத்தின் விலையில் திடீர் உயர்வு காணப்படுகிறது. அதாவது ஒரேநாளில் சவரனுக்கு ரூ.160 ரூபாய் வீதம், கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, தங்க நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments