கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புரட்டி எடுத்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொடூரக் கொரோனா (Cruel corona)
உலக நாடுகளை உலுக்கியக் கொரோனா இந்தியாவிலும் தன் கோரத் தாண்டவத்தை ஆடியது. முதல் மற்றும் 2ம் அலையில் சிக்கிச் சின்னாபின்னமாகிப் பலியானவர்கள் ஏராளம்.
4.45 லட்சம் பேர் பலி (4.45 lakh People killed)
நமது நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 3.3 கோடி பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 4.45 லட்சம் பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளனர்.
தற்போது தொற்று பாதிப்புக் கட்டுக்குள் இருந்தாலும், கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தக் காலகட்டத்தில், தினசரி பாதிப்புகள் 4 லட்சம் என்ற அளவில் பதிவாகின. கொரோனா உயிரிழப்பும் பல மடங்கு அதிகரித்து.
பரிந்துரை (Recommendation)
இந்நிலையில், கொரோனாவினால் (Corona Virus) இறந்தவர்களுக்கு இழப்பீடு தருவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபப்ட்ட வழக்கு ஒன்றில், பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்த மத்திய அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA), கொரோனா காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதாகக் கூறியது.
ரூ .50,000
இதன் அடிப்படையில், மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து (SDRF) கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ .50,000 நிவாரண உதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசு விளக்கம் (Federal Government Interpretation)
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் ICMR வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, கோவிட் -19 காரணமாக இறந்ததாக வழங்கப்பட்ட சான்றிதழின் அடிப்படையில், நிவாரண நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் (SDRF) இருந்து இதை மாநில அரசுகள் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தடுப்பூசிக்கு ஆன்ட்ராய்ட் போன் பரிசு – ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!
இன்னும் 6 மாதங்கள்தான்- கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என அறிவிப்பு!
Share your comments