ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் விவசாயிடம் 85 ஆயிரம் ரூபாயைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் சக விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாகன சோதனை (Raid)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் 4 ரோடு தொப்பம்பாளையம் என்ற பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கடாசலம் என்பவர் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
ரூ.85 ஆயிரம் ரொக்கம் (Rs 85,000 in cash)
அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது வேனில் வந்த திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த விவசாயி சிவசங்கர் என்பவரிடம் ரூ.85 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது.
ஆவணங்கள் இல்லை (No documents)
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் பணத்துக்கான ஆவணங்கள் கேட்டனர். அதற்கு சிவசங்கர் தான் வளர்த்த கோழிகளை ஒட்டன்சத்திரம் பகுதியில் விற்பனை செய்து விட்டு பணத்தைக் கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
சாத்தியமில்லை (Not Possible)
ஆனாலும் ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தைப் பறிமுதல் செய்தனர். மாடு, ஆடுகளை விற்பனை செய்யும் விவசாயிகள் அதற்கு ஆவணங்களைக் கேட்டால், ஆவணங்களுக்கு அவர்கள் எங்கே போவார்கள். ஆவணங்களைத் தயார் செய்துவிட்டுதான், கால்நடைகளை விற்பனை செய்ய வேண்டும் என்பது சாத்தியமில்லை.
அதிர்ச்சி (Shock)
வாக்காளர்களுக்கு கொடுக்கப்பதற்காகக் பணம் கொண்டு செல்லும் அரசியல் கட்சியினரைப் பொறிவைத்துப் பிடிக்கவேண்டிய, தேர்தல் பறக்கும் படையினர், அப்பாவிகளான விவசாயிகளைப் பிடிப்பது, சக விவசாயிகளை அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இதேநிலைத் தொடர்ந்தால், தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும் வரை, விவசாயிகள் தங்கள் வேளாண் பணிகளைத் தொடர முடியாதோ என எண்ணத் தோன்றுகிறது.
மேலும் படிக்க...
மானியம் பெற்று தருவதாக விவசாயிகளிடம் மோசடி!
தமிழகம் வர இனி E-Pass கட்டாயம்- அதிரடி உத்தரவு!
சென்னையில் பிடிபடும் 80 சதவீத மீன்களில் பிளாஸ்டிக் துகள்கள்! அதிர்ச்சி தகவல்!
Share your comments