1. செய்திகள்

நாட்டுக்கோழி வளர்க்க ரூ. 75 ஆயிரம் வரை மானியம் - கரூர், சேலம் மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs. Grant up to Rs 75,000 - Karur, Salem District Collectors call!

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு கரூர் மற்றும் லேசம் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: 

  • ஒரு ஒன்றியத்துக்கு தலா 2 அல்லது 3 பயணாளிகள் வீதம் 20 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  • தேர்வு செய்யப்படுவோருக்கு கோழிவளர்ப்பு, மோலாண்மை பயிற்சி 5நாட்கள் வழங்கப்படும்.

  • ஒவ்வொரு பயனாளியும் 1000 எண்ணிக்கையில் நாட்டுக் கோழிக்குஞ்சுகளை ரூ.30,000க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

  • கொள்முதல் செய்த பின்னர், மானியமாக 50 சதவீதம் அதாவது ரூ.15,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

  • அதேபோல், 1500 கிலோ கோழித் தீவனம் ரூ.45.000க்கு கொள்முதல் செய்த பின்னர் ரூ.22.500 மானியமாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

  • மேலும் ரூ.75.000 மதிப்புள்ள குஞ்சு பொறிப்பான் கொள்முதல் செய்த பின்னர் அதற்கான பின்னேற்பு மானியமாக ரூ.37.500 வழங்கப்படும்.

  • இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் தங்கள் அருகே உள்ள கால்நடை மருந்தகத்தின் உதவி மருத்துவர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்

இதேபோல் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 20 ஊராட்சிகளில் 5 முதல் 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும், விருப்பமுள்ளவர்கள் உங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகம் மற்றும் உதவிமருத்துவரை அணுகி விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!

தினமும் ரூ.160 செலுத்தி ரூ.23 லட்சத்தை அள்ளுங்கள்- LICயின் Money back Plan!

PM SVANidhi Mobile App மூலம் ரூ.10ஆயிரம் உடனடிக் கடன்-ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டம்!

English Summary: Rs. Grant up to Rs 75,000 - Karur, Salem District Collectors call! Published on: 25 November 2020, 11:48 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.