அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம், ஜூலை மாதம் தொடங்கப்பட உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அரசு கல்லூரியில் மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும், அரசு பள்ளிகளின் மாணவிகளின் உயர்கல்விக்கு உதவும் வகையிலும், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாதம் ரூ.1,000
இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாகக் கூறினார்.
2000 பேருக்கு
ஐடிஐ முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தொழிற் கல்வியை முடித்த சுமார் 2000 மாணவர்களுக்கு, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், உள்ளிட்ட 6 பிரிவுகளில் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் உறுதி
அண்ணா பல்கலைக்கழகம் உட்பட அதன் உறுப்புக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் தொழில் கல்வி முடித்த மாணவர்களுக்கு 2 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி கூறினார்.
மேலும் படிக்க...
நல்லெண்ணெய் விலை கிடு கிடு ஏற்றம் - ஒரே வாரத்தில் ரூ.166 உயர்வு!
Share your comments