உயர் கல்விக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறும் திட்டத்தில், விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள, மேலும் 2 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்தை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயர்கல்விக்கு உதவி
பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், அரசு பள்ளியில் படிப்போருக்கு உதவும் விதமாகவும், அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு வரை படித்து, அரசு கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித்தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு கல்லூரிகள்
இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள இத்திட்டத்தில், இதுவரை சுமார் 4 லட்சம் மாணவிகள் சேர்ந்துள்ளனர். கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு அடுத்த மாதம் முதல் இத்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
2 நாள் அவகாசம்
இந்த நிலையில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், வங்கி கணக்கு விவரங்களில் திருத்தம் இருப்பின் அதனை மேற்கொள்ளுதல், புதிதாக வங்கி கணக்கு தொடங்குதல் போன்ற காரணங்களுக்காக அவகாசம் கொடுத்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஒரு சரக்கு வாங்கினால், 2 பாட்டில் இலவசம் - குஷியில் குடிமகன்கள்!
கூழ் காய்ச்சும் போது வலிப்பு -பாத்திரத்தில் விழுந்து இளைஞர் மரணம்!
Share your comments