டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு ரூ .500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
பூரண மது விலக்கை கொண்டுவரவேண்டும் என மக்களும், சில அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் எது எப்படியிருந்தாலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், டாஸ்மாக் மதுவிற்பனையை அரசே மேற்கொண்டு வருகிறது. இது தாய்குலம் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
எதிர்ப்பு ஒருபுறம் இருக்கும் அதேவேளையில், டாஸ்மாக் வருவாய் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் ரூ 2,200 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
2020-21ஆம் ஆண்டில் மொத்தமாக ரூ 33,811 கோடி டாஸ்மாக் மூலம் வருவாய் கிடைத்துள்ளது.அதன்படி நடப்பு ஆண்டில் மார்ச் மாதம் வரை மட்டும் ரூ 36,013 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு
இந்நிலையில் டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு ரூ .500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட பேரவையில் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செலவு
மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ 500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் கூறினார். மொத்தம் 24,805 தொகுப்பு ஊதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதால் அரசுக்கு ரூ 16.67 கோடி கூடுதல் செலவாகும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
Share your comments