இந்தியாவில் மொபைல் போன் பயனர்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள சாம்சங் நிறுவனம் தற்போது ஸ்டூடன்ட் அட்வான்டேஜ் திட்டத்தின் கீழ் (Student Advantage scheme) இந்திய மாணவர்களுக்காக பிரத்யேக சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு டிஜிட்டல் கல்வி வளர்ச்சிப்பெற்றுள்ள நிலையில், சாம்சங் நிறுவனம் வழங்கக்கூடிய தள்ளுபடி விற்பனையால் பல மாணவர்கள் நிச்சயம் பயன்பெறுவார்கள் என நம்பப்படுகிறது.
மேலும் இந்த சலுகையில், சாம்சங் கேலக்ஸி S20 FE 4 மற்றும் Galaxy A series ஸ்மார்ட்போன்கள் உள்பட இந்நிறுவனத்தின் முதன்மை ஸ்மோர்ட்போன்கள் ரூ 10 ஆயிரம் மற்றும் Galaxy Tab A series and Galaxy Tab S series போன்றவை 5 சதவீத தள்ளுபடியிலும் கிடைக்கப்பெறவுள்ளது. இதோடு Samsung wearables மற்றும் லேப்டாக்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம்சங் மானிட்டர்கள் 5 சதவீத தள்ளுபடியிலும் கிடைக்கும் என அறிவித்துள்ளது.
இதோடு மட்டுமின்றி, Samsung Galaxy S22 Ultra வாங்கும் போது, மாணவர்கள் Samsung Galaxy Watch 4 ஐ ரூ. 2,999 வரை மேம்படுத்தப்பட்ட போனசுடன் கூடுதலாக ரூ. 8,000 அல்லது கேஷ்பேக் ரூ. 5,000 அல்லது 5 சதவீத தள்ளுபடியுடன் பெறலாம். கூடுதலாக பூஜ்ஜிய முன்பணத்துடன் 24 மாத கட்டணமில்லா EMI மூலம் பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் Samsung Galaxy S22 மற்றும் Galaxy S22 யை மாணவர்கள் ஷோரூம்கள் அல்லது ஆன்லைன் வாயிலாக வாங்கும் போது, Samsung Galaxy Buds 2 ஐ ரூபாய் 2,999 மற்றும் மேம்படுத்தப்பட்ட போனசுடன் ரூ.8 ஆயிரம் அல்லது கேஷ்பேக் ரூபாய் 5 ஆயிரம் அல்லது 5 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கும்.மேலும் கூடுதலாக பூஜ்ஜிய முன்பணத்துடன் 24 மாத கட்டணமில்லா EMI யும் மாணவர்களுக்கு கிடைக்கும் என சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் இத்திட்டத்தை பெறும் முறை: டிஜிட்டல் முறையிலான கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும், மாணவர்களின் நலன்களுக்காகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சலுகையை, https://www.samsung.com/in/microsite/student-advantage/ மூலமாகவோ அல்லது அருகில் உள்ள சாம்சங் பிரத்யோக ஷோரூம் சென்றும் பெற முடியும்.
மேலும் படிக்க
Share your comments