KCC எனப்படும் கிசான் கடன் அட்டை பெற்றிருக்கும் விவசாயிகள் தங்களது கடன் இலக்கை அதிகரித்தல் அல்லது குறைத்தலை ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம் என எஸ்பிஐ (SBI) அறிவித்துள்ளது.
விவசாயிகள் தங்கள் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக மத்திய அரசின் சார்பில் KCC எனப்படும் கிசான் கடன் அட்டை (Kisan Credit Card) வழங்கப்படுகிறது. இந்த சேவையை எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகள் அளிக்கின்றன.
இந்நிலையில், விவசாயிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில், Yono-app மூலம் உங்கள் கிசான் கடன் அட்டையின் கடன் இலக்கை அதிகரித்துக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், கடன் இலக்கைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால், அந்த சேவையையும், வீட்டில் இருந்தபடியே செய்துகொள்ளலாம். இதற்கு Kisan Credit Card Review or KCC Review Option என்று பெயர்.
விண்ணப்பம் இல்லை (No application)
இதன் மூலம் எந்த வித விண்ணப்பத்திலம் விவசாயிகள் பூர்த்தி செய்யத் தேவையில்லை. உங்கள் மொபைலில் Yono appல் 4 கிளிக் (Click) செய்தால் போதும்.
எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)
இதற்கு முதலில் உங்கள் மொபைல் போனில், SBI YONO appயை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு அதில் உங்கள் வங்கிக்கணக்கிற்குள் செல்ல வேண்டும். பின்னர் அதில் இருந்து KCC Review optionனிற்குள் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க...
மினிமம் பேலன்ஸ் அபராதம் குறைப்பு- SBI அதிரடி!
வருமானவரி கணக்கு தாக்கல் செய்யக் காலஅவகாசம்- நவம்பர் வரை நீட்டிப்பு!
Share your comments