ஒருவர் , பொது வருங்கால வைப்பு நிதியில் மாதத்திற்கு ரூ .9000 முதலீடு செய்தால், அடுத்த 15 ஆண்டுகளில் அவர் ரூ .28 லட்சத்தை திரும்பப் பெறலாம்.
அது எவ்வாறு என்பதைப் பார்ப்போம்.
பொது வருங்கால வைப்பு நிதி அல்லது பிபிஎஃப் என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு சிறிய சேமிப்புத் திட்டமாகும். இது 100 சதவீதம் ஆபத்து இல்லாதது. இது ஒரு வரையறுக்கப்பட்ட தன்னார்வ முதலீட்டு கருவியாகும். இந்த சேமிப்பு திட்டத்தை நீங்கள் எஸ்பிஐ வங்கியில் தொடங்கலாம்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை பிபிஎஃப் வட்டி மற்றும் பிபிஎஃப் திரும்பப் பெறும் தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு. பிபிஎஃப் கணக்கு இஇஇ பிரிவின் கீழ் வருகிறது. எனவே, முதலீடு ஆண்டுக்கு ரூ .1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த பிபிஎஃப் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். தற்போதைய பிபிஎஃப் கணக்கிற்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
இந்த பிபிஎஃப் (PPF) திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். தற்போதைய பிபிஎஃப்(PPF) கணக்கிற்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
ஒரு நபர் 15 வருடங்களுக்கு மாதத்திற்கு ரூ .9000 (வருடத்திற்கு ரூ .1,08,000) முதலீடு செய்தால், பிபிஎஃப் முதிர்வு தொகை ஒருவருக்கு ரூ .28,40,111.34 ஆக இருக்கும் என்று பிபிஎஃப் கால்குலேட்டர் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
இதில் ரூ .28,40,111.34, ஒருவரின் பிபிஎஃப் வட்டி ரூ .12,20,111.34 ஆகவும், நிகர முதலீடு ரூ .16,20,000 ஆகவும் இருக்கும். எனவே நீங்கள் முதலீட்டை விட கிட்டத்தட்ட 75 சதவீதம் கூடுதலாக திரும்ப்ப் பெறுவீர்கள்.
மேலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை முதிர்வு காலத்திற்குப் பிறகும் அடுத்த 15 ஆண்டுகள் நீட்டித்தால் நீங்கள் கோடீஸ்வரராக மாறவும் வாய்ப்புள்ளது
மேலும் படிக்க..
SBI வங்கியின் Rupay அட்டைதாரர்களுக்கு ரூ.2 லட்சம் வரை விபத்துக் காப்பீடு - SBI வங்கி அறிவிப்பு!
SBI Job offer: 8500 அப்ரெண்டீஸ் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துடுங்கள்!!
Share your comments