தமிழகத்தில் 1ம் முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பதற்கானப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக 1ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுடன் பெற்றோரும், வகுப்பறையில் அமர இருக்கைகள் தயார் செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்க தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி கடந்த 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
மன அழுத்தம் (mental stress)
ஓராண்டிற்கு மேலாக மாணவர்கள் வீட்டிலேயே இருப்பதால் அவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படுவதோடு ஒருவித மன அழுத்தத்திற்கு அவர்கள் ஆளாகி இருப்பதாக பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பள்ளிகள் திறப்பு (Opening of schools)
இதனைக்கருத்தில் கொண்டு வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்ட நிலையில், பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.
20 மாணவர்கள் மட்டுமே(20 students only)
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதி, முகக் கவசம் கட்டாயம், தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோருக்கும் இருக்கை (Seat for parents)
அத்துடன் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் பள்ளியில் பெற்றோர்களும் இருக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
முகக் கவசம் (Mask)
குழந்தைகளால் முக கவசம் அணிந்து கொண்டு நீண்ட நேரம் உட்கார முடியாது. அதே போல் அவர்களுக்கு முக கவசம் எப்படி அணியவேண்டும் என்பதும் தெரியாது. இந்த சூழ்நிலையில் இரண்டு டோஸ் தடுப்பு ஊசிச் செலுத்தி கொண்ட பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து வகுப்பில் அமரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
குறுவை நெல் கொள்முதல் பணிகள்- விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவு!
கட்டணம் வசூலித்தால், கல்லூரி உரிமம் ரத்து- பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை!
Share your comments