புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் தமிழகத்திலும் பள்ளிகள் வரும் 20ஆம் தேதியன்று திறக்க பள்ளிக் கல்வி துறை ஆலோசித்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவியதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 9 மாதங்களுக்கு பிறகு டிசம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு, ஜனவரி மாதம் 2021 இல் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகள் மட்டும் திறக்கப்படவுள்ள நிலையில் கொரோனாவின் தீவிரம் அதிகமானது மற்றும் கொரோனாவின் இரண்டாம் அலை தொடங்கியது.
இதற்கு பிறகு மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசிபோடும் பணிகள் தீவிரபடுத்தப் பட்டதால் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளன.
பல மாநிலங்களில் கொரோனா தோற்று பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் அந்த மாநிலங்களில் பள்ளிகளை திறக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பொதுப்போக்குவரது,கடைகள் மற்றும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தமிழகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதன் போதிலும் இன்னும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருதிகளை கேட்ட பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று பள்ளிகள் திரைப்பதைக் குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்,மேலும் வரும் ஜூலை 20 ஆம் தேதி முதல் அல்லது அதன் பிறகு பள்ளிகள் திறக்கப்படலாம் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த ஆலோசனை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் சேர்க்கப்படும்,அவர் பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க:
அரசு பள்ளியில் சேரும் மாணவருக்கு ரூ.1,000 பரிசு- அசத்தும் தலைமை ஆசிரியர்!
நிதிநெருக்கடி எதிரொலி-தமிழகத்தில் 10,000 பள்ளிகள் மூடப்படுகின்றன!
Share your comments