விவசாயத்தில் விளைந்த பொருட்களுக்கு முறையான லாபம் இல்லாத நிலையில், அதனை மதிப்புக்கூட்டி மக்கள் விரும்பும் பானங்களாக மாற்றி விற்பனை செய்து லாபம் பார்த்து வருகிறார் கீர்த்தனா நவநீதன்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த கீர்த்தனா நவநீதன் எம்.பி.ஏ பட்டப்படிப்பை முடித்துள்ளார். வேளாண்துறையை சார்ந்து இயங்கி வரும் கீர்த்தனா, கிருஷி ஜாக்ரன் Facebook பக்கதில் வரந்தோறும் நடைபெற்று வரும் "Farmer The Brand" நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனது வேளாண் அனுபவங்கள் குறித்தும் அவரது ஃபிளேவர்ஸ் பிராண்ட் மற்றும் அதன் தயாரிப்புகள் குறித்தும் விரிவாக பகிர்ந்துகொண்டார். வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும்
ஃபிளேவர்ஸ் அவென்யூ
பட்டபடிப்பு நாள் முதலே விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்டு அதனை தனது தொழிலாகவும் தேர்ந்தொடுக்க முடிவு செய்துள்ளார் கீர்த்தனா. முதற்கட்டமாக பாரம்பரிய விவசாயமான கரும்பு மற்றும் வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வந்த நிலையில் முறையான லாபம் இல்லாததால் மாற்று வழிகளை யோசிக்க தொடங்கினார். அதன் விளைவாக உருவானதுதான் இந்த ஃபிளேவர்ஸ் அவென்யூ.
பின்னர், பீட்ரூட் பயிரிட்டு அதை மதிப்புக்கூட்டி பவுடராகவும், ஜூஸாகவும் மாற்றி விற்பனையில் ஈடுபட்டார். அதில் வரவேற்பு கிடைக்கவே மெல்ல மெல்ல தன் பிராண்டை விரிவுபடுத்தியுள்ளார். அதன் தொடர்ச்சியாக செம்பருத்தி, கேரட், சங்கு பூ, அத்தி பழம், பைனாப்பிள், புதினா என பல்வேறு பயிர்களை இயற்கை முறையில் பயிர் செய்து அவைகளை மதிப்புக்கூட்டி ஜூஸாக மாற்றி விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.
இயலாதவர்களுக்கு வாழ்வு தரும் கீர்த்தனா
தன் வயல்களில் இருந்து மட்டுமல்லாமல், மாற்றார் வயல்களிலும் விளைந்த பொருட்களை தன் தயாரிப்புக்கு போக விற்பனைக்கும் உதவி செய்து வருகிறார். மேலும், மதிப்புக்கூட்டு பொருட்களை தயாரிக்க திறமை வாய்ந்த பெண்கள் படையை வைத்து நடத்தி வருகிறார்.
மருத்துவ குணம் கொண்ட தயாரிப்புகள்
கேரட் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ், லெமன் ஜிஞ்சர் மின்ட், பைனாப்பிள மற்றும் பல ஃபிளேவர்களில் பலரக பானங்கள் மற்றும் பணங்கற்கண்டு, பணைவெல்லம் ஆகியவை சுத்தமான இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதாக கூறும் கீர்த்தனா, அனைத்தும் ஆரோக்கியமான நலவாழ்வை அளிக்கும் மருத்துவகுணம் நிறைந்து என்றும் கூறுகிறா். மேலும் தகவல்களுக்கு http://www.flavoursavenue.com/
Share your comments