அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் அரசு பஸ் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி மாலா. இவர் காது கேளாதோர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியின் மகள் கிருஷ்ணவேணி (வயது 15). பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், ஜெயங்கொண்டத்தில் உள்ள காது கேளாதோருக்கான தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கரகாட்டம் ஆடிக்கொண்டே நாற்று நடவு:
மாற்றுத்திறனாளியான கிருஷ்ணவேணி (Krishnaveni) விவசாயத்தை காக்க வேண்டும் என்றும், பாரம்பரிய கலைகளை காக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலையில் கரகம் வைத்து ஆடிக்கொண்டே வயலில் இறங்கி நேற்று நாற்றுகளை நட்டார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர் கரகாட்டம் ஆடிக்கொண்டே நடவு செய்ததை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து, மாணவியை பாராட்டினர்.
சாதனை முயற்சி
விவசாயம், கரகாட்டம் உள்ளிட்டவற்றை பேணிக்காத்து, கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக கடந்த 2 நாட்களாக வயலில் இறங்கி இந்த பயிற்சியினை (Training) கிருஷ்ணவேணி மேற்கொண்டுள்ளார். மேலும், இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் (India Book of Record) இடம்பெறவும் இந்த சாதனை முயற்சி செய்துள்ளோம் என்று மாணவியின் தாய் மாலா கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வரவிருக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான எதிர்ப்பார்ப்பு!
பருவம் தவறிய மழையால் விவசாயிகள் வேதனை! வழிகாட்டும் வேளாண் துறை!
Share your comments