ஈரோடு மாவட்டம், சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் (Sesame) ரூ.73½ லட்சத்துக்கு போனது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாய உற்பத்திப் பொருட்களை ஏல முறையில் விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில், தற்போது எள் ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டது.
எள் ஏலம்
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 1,008 மூட்டைகளில் எள்ளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ரா.சதீஷ்குமார் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 84 ரூபாய் 69 காசுக்கும், அதிகபட்ச விலையாக 112 ரூபாய் 72 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
ரூ.73½ லட்சம்
சிவப்பு எள் (Red Sesame) கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 83 ரூபாய் 92 காசுக்கும், அதிகபட்ச விலையாக 106 ரூபாய் 90 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளை எள் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 84 ரூபாய் 69 காசுக்கும், அதிகபட்ச விலையாக 106 ரூபாய் 60 காசுக்கும் விற்கப்பட்டது. எள் மொத்தம் ரூ.73 லட்சத்து 47 ஆயிரத்து 332-க்கு ஏலம் போனது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
உரங்களின் விலை உயர்வு நிறுத்தி வைப்பு! பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம்!
கோழிகளுக்கு வெப்ப அயற்சியைத் தடுக்க குளிர்ந்த நீர் கொடுக்க வேண்டும்! ஆராய்ச்சி நிலையம் தகவல்
Share your comments