பெரிதும் உற்றுநோக்கப்பட்ட டானா புயல் தீவிர புயலாக கரையை கடந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தினை பொறுத்தவரை தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக உள்ள நிலையில் இன்று திருச்சி, தஞ்சாவூர் உட்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஆனைமடுவு அணை (சேலம்) 15; ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 13; கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), மன்னார்குடி (திருவாரூர்), தக்கலை (கன்னியாகுமரி), நெய்யூர் AWS (கன்னியாகுமரி), ஆடுதுறை AWS (தஞ்சாவூர்) தலா 11;
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
நேற்று (24-10-2024) வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த தீவிர புயல் (டானா), வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (25.10.2024) அதிகாலை 01:30 - 03:30 மணிக்கு இடையே வடக்கு ஒரிசா கடற்கரையில், பிதர்கனிகா மற்றும் தாமரா (ஒரிசா) பகுதிகளுக்கு அருகே தீவிர புயலாகவே கரையை கடந்தது. தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவும் சூழ்நிலையில் கனமழை பெய்யும் மாவட்டங்களின் விவரம் பின்வருமாறு-
25.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27.10.2024 to 31.10.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வானிலைத் தொடர்பான மேலும் விவரங்களுக்கு mausam.imd.gov.in/chennai என்கிற இணையதளத்தை காண பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
Read more:
நாடு முழுவதும் 16 வகையான கால்நடைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்- எதற்காக தெரியுமா?
மக்காச்சோளம் சாகுபடி: முதலுக்கு மோசம் செய்வது படைப்புழுவா? காட்டுப்பன்றியா? கட்டுப்படுத்த என்ன வழி?
Share your comments