கடந்த மாத இறுதியில் வங்க கடலில் மையம் கொண்ட புயல் மேற்கு நோக்கி நகர்த்து இன்று முற்பகல் அளவில் கரையை கடக்க உள்ளது. ஒடிசாவில் உள்ள பூரி மாவட்டத்தில் கரையை கடக்கும் என எதிர் பார்க்க படுகிறது. புயலின் வேகம் மணிக்கு 200 கிமீ ஆக இருக்கும் என வானிலை மையம் கூறகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் இது போன்ற தீவிர புயலினை ஒடிசா மாநிலம் பார்த்ததில்லை எனலாம். இதனால் கடலோரத்தில் உள்ள 11 மாவட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை பத்து லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக 800 க்கு அதிகமான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒடிசா விரைந்துள்ளனர். முப்படையினரையும் தயார் நிலையில் இருக்கும் படி உத்தரவிட பட்டுள்ளது. 80 அதிகமான இரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அனைவரையும் வரும் 15 ஆம் தேதி வரை விடுப்பு எடுக்க அனுமதிக்க கூடாது என்ற சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போர்க்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்றவை மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளதாக கப்பற்படை தெரிவிக்கிறது. மேலும் மக்களுக்கு தேவையான உணவு, குடி நீர், பால் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஆந்திர, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது. அண்டை மாநிலமான ஆந்திரவில் உள்ள கடலோர மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.அதிகபட்சமாக 173.75 மி.மீ மழை இதுவரை பதிவாகியுள்ளது.
Share your comments