1. செய்திகள்

வீரமாய் செயல்பட்ட 6 இராணுவ வீரர்களுக்கு சவுரிய சக்ரா விருது!

R. Balakrishnan
R. Balakrishnan
Shaurya Chakra Award

குடியரசு தினத்தை முன்னிட்டு வீர தீர செயல்கள் புரிந்ததற்காக ராணுவ வீரர்கள் ஆறு பேருக்கு, 'சவுரிய சக்ரா' விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின்போது வீர தீர செயல்கள் புரிந்த ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருதுகள் நேற்று வழங்கப்பட்டுள்ளன. Çஅதன்படி இந்திய ராணுவத்தின் மூன்றாவது மிக உயரிய விருதான சவுரிய சக்ரா விருது ஆறு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் வீரமரணமடைந்த ஐந்து பேருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சவுரிய சக்ரா விருது (Shaurya chakra Award)

பயங்கரவாதிகளை துணிச்சலுடன் சுட்டு வீழ்த்தி, வீர மரணமடைந்த நைப் சுபேதார் ஸ்ரீஜித், ஹவில்தார் அனில் குமார் தோமர், ஹவில்தார் பின்கு குமார், ஹவில்தார் கஷிரே பம்மநல்லி, செபாய் மருப்ரோலு ஜஸ்வந்த் குமார் ரெட்டி ஆகியோருக்கு சவுரிய சக்ரா விருது மரணத்துக்குப் பின் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர கடந்த ஆண்டு ஜூலையில் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் ராகேஷ் ஷர்மாவுக்கும் சவுரிய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் 19 பேருக்கு பரம் விஷிஸ்த் சேவா பதக்கம்; நான்கு பேருக்கு உத்தம் யுத்த சேவா பதக்கம்; 33பேருக்கு அதி விஷிஸ்த் சேவா பதக்கம்; 84 பேருக்கு சேனா பதக்கம் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.

அசோக் சக்ரா விருது (Ashok Chakra Award)

பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்த காஷ்மீர் போலீஸ் ஏஎஸ்ஐ பாபு ராமிற்கு அசோக் சக்ரா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், ஏஎஸ்ஐ பாபுராம் வீரமரணம் அடைந்தார். அதற்கு முன் அவர் 3 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றார். அவரது பணியை பாராட்டும் வகையில், அசோக் சக்ரா விருதை ஜனாதிபதி வழங்கினார். அதனை அவரது மனைவி ரினா ராணி மற்றும் மகன் மணிக் ஆகியோர் பெற்று கொண்டனர்.

ஜனாதிபதி விருது (President Award)

தமிழக காவல் துறை மற்றும் சி.பி.ஐ.,யில் பணிபுரியும் 22 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவை ஒட்டி, மத்திய உள்துறை அமைச்சகம், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, ஜனாதிபதி விருது அறிவித்துள்ளது. அந்த பட்டியலில், தமிழக காவல் துறை மற்றும் சி.பி.ஐ.,யில் பணிபுரியும் 22 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க

கடுங்குளிரிலும் தேசியக் கொடியை ஏந்தி குடியரசு தின விழா கொண்டாட்டம்!

தேசியக் கொடியை ஏற்றி, முப்படைகளின் மரியாதையை ஏற்றார் ஜனாதிபதி!

English Summary: Shaurya Chakra Award for 6 heroic soldiers! Published on: 26 January 2022, 02:23 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.