கோவையில் ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழா, அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கானோரை, ஆன்மீக ஒளியில் மிளிரச் செய்தது.
வாழ்வின் உயரிய தேடல்களை கொண்டவர்களுக்கு இந்நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மஹா சிவராத்திரியின் நல்லொளி நம் ஒவ்வொரு நாளின் பாதையையும் பிரகாசமாக்கட்டும் எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
ஈஷா யோக மையத்தில் சத்குரு முன்னிலையில் நடைபெற்ற உலகின் மிக பிரம்மாண்ட மஹா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாண்புமிகு குடியரசு தலைவர். திரெளபதி முர்மு "முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக சிவன் திகழ்கிறார்" என்றார். ஓம் நமசிவாய என்ற மந்திரத்துடன் தன் உரையை தொடங்கிய குடியரசு தலைவர் பேசியதாவது:-
மூர்த்தி
சிவனாக இருக்கும் அனைத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். ஆதியோகி முன்னிலையில் நடைபெறும் இந்த புனித மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்றதை ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறேன். உலகிலுள்ள பல்வேறு கலாச்சாரங்கள், பக்தி மற்றும் ஞானத்தின் பாதை குறித்து பேசுகின்றன. அவை அனைத்திற்குமான மூர்த்தியாக சிவன் விளங்குகிறார்.
அவர் குடும்ப வாழ்க்கையிலும் இருக்கிறார் அதே வேளையில் சந்நியாசியாகவும் இருக்கிறார். அவர் தான் இந்த உலகின் முதல் யோகி மற்றும் முதல் ஞானி. சிவன் கருணை கடவுளாகவும், ஆக்ரோஷமான வடிவமாகவும் இருக்கிறார்.
ஆக்கும் மற்றும் அழிக்கும் சக்திகளில் ஒன்றிணைந்த குறியீடாகவும், அறியாமை எனும் இருளின் முடிவாகவும், ஞான பாதையின் திறப்பாகவும் மஹாசிவராத்திரி விளங்குகிறது.
ஆன்மீகப் பாதை
நவீன காலத்தின் போற்றத்தக்க ரிஷியாக விளங்கும் சத்குரு,ஏராளமான இளைஞர்களை ஆன்மீக பாதையில் ஈர்க்கும் யோகியாகவும் இருக்கிறார். இவ்வாறு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பேசினார்.
இந்த விழாவில்,நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் திரு. அர்ஜூன் ராம் மேக்வால், புதுச்சேரி துணை முதல்வர் திரு. நமச்சிவாயம்,
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் திரு. அண்ணாமலை, பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் திரு. சி.டி. ரவி,திரை பிரபலங்கள் கங்கனா, தமன்னா, ஜூஹி சாவ்லா உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க...
Share your comments